என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கல்லூரி மாணவர்கள் மோதல்"
சென்னை:
திருவொற்றியூர் சுங்க சாவடியில் இருந்து திருவான்மியூர் நோக்கி ‘6டி’ மாநகர பஸ் புறப்பட்டு சென்றது. தண்டையார்பேட்டை மகாராணி திரையரங்கம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் மாநில கல்லூரி மாணவர்கள் நிறைய பேர் பயணம் செய்தனர்.
தியாகராஜர் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் பஸ் நிற்கும் போது உள்ளே இருந்த மாநில கல்லூரி மாணவர்கள் வெளியில் நின்ற மாணவர்களை பார்த்து கிண்டல் செய்தனர். அப்போது பஸ் புறப்பட துவங்கியது.
இதனால் ஆத்திரம் அடைந்த தியாகராஜர் கல்லூரி மாணவர்கள் பஸ்சை விரட்டிச் சென்று பஸ்சுக்குள் ஏற முயன்றனர். ஆனால் பஸ் நிற்கவில்லை.
உடனே ஆவேசத்தில் பஸ் மீது கல் வீசினார்கள். இதில் பஸ்சின் பின் பக்க கண்ணாடி உடைந்து பயணிகள் மீது விழுந்தது. இதை கண்ட டிரைவர் பஸ்சை நிறுத்தினார். கல்வீசிய மாணவர்களை பிடிக்க பயணிகள் முயன்றனர். ஆனால் அதற்குள் மாணவர்கள் ஓடிவிட்டனர்.
இதுபற்றி டிரைவர் ராஜேந்திரன் தண்டையார் பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று பஸ் கண்ணாடியை உடைத்த மாணவர் மகேஷ் என்பவரை கைது செய்தனர். இவர் தியாகராஜர் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார்.
மேலும் 6 மாணவர்களை போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று எச்சரித்து அனுப்பினார்கள்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கருக்கை கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 17). இவரது நண்பர் சிவசங்கர் (17). இவர்கள் 2 பேரும் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகின்றனர்.
சம்பவத்தன்று விக்னேசும், சிவசங்கரும் கல்லூரிக்கு செல்வதற்காக கருக்கையில் இருந்து பண்ருட்டிக்கு அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். அதே பஸ்சில் கருக்கை காலனி பகுதியை சேர்ந்த பிரவின்ராஜ் (17), சூர்யா (17), ராமச்சந்திரன் (17) ஆகிய 2 பேரும் வந்தனர். இவர்கள் அனைவரும் கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பாலிடெக்னிக் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பிரவின் ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து விக்னேஷ் மற்றும் சிவசங்கரிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் மாளிகைபட்டு ரைஸ்மில் அருகே பஸ் நின்றபோது விக்னேசையும், சிவசங்கரையும் கீழே இறக்கி சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த விக்னேசையும், சிவசங்கரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் விக்னேஷ் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் பிரவின் ராஜ், சூர்யா, ராமச்சந்திரன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவின் ராஜை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கருக்கை பகுதியை சேர்ந்த பரம நாதன் (18), பார்த்திபன் (17) உள்பட 3 பேர் சேர்ந்து பிரவின்ராஜை தாக்கியதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நான் கருக்கை பகுதியை சேர்ந்த விக்னேசையும், சிவசங்கரையும் தாக்கினோம் என கூறினார்.
இதைத்தெதாடர்ந்து பிரவின்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் பரமநாதன், பார்த்திபன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து பரமநாதனையும், பார்த்திபனையும் போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்